--- --:--:-- --

குற்றாலத்தில் கோழி கூண்டுக்குள் பதுங்கியிருந்த மலைப்பாம்பு மீட்பு..!

3

குற்றாலத்தில் கோழி கூண்டுக்குள் பதுங்கியிருந்த மலைப்பாம்பு மீட்கப்பட்டு அடர் வனப்பகுதியில் விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

 

இதனால் குற்றாலம் மலைப்பகுதியில் இருந்து ஏராளமான ஊர்வலங்கள் மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டுள்ளன. தற்போது மழை குறைந்து வெயில் தொடங்கியுள்ளதால் பாம்புகள் வெளியேற நடமாட தொடங்கியுள்ளன.

 

அப்படி வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ராட்சத மலைப்பாம்பு பழைய குற்றாலம் செல்லும் பகுதியில் உள்ள வீட்டுக்குள் இருந்து கோழி கூண்டுக்குள் தஞ்சமடைந்தது. வீட்டின் உரிமையாளர் பிரேமா இன்று வழக்கம்போல கோழிகூண்டை திறந்துள்ளார்.

 

அப்போது கோழிகளுக்கு பதிலாக உள்ளே மலைப்பாம்பு இருந்ததை கண்டு அதிர்ந்து போயுள்ளார். அங்கிருந்து ஓடி அந்த பெண் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். வனத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை லாவகமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon