--- --:--:-- --

ஆன்லைன் ரம்மி விளையாட்டை விளையாடினால் அபராதம் உறுதி..!

3

ன்லைன் ரம்மி போன்ற இணைய வழி சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் இணைய வழி சூதாட்டங்களை இளையோர் தங்களது பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்து விடும் அவலத்தை தடுக்கும் விதமாக அவசர சட்டம் இயற்றப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி இணையவழி சூதாட்டங்களில் ஈடுபடுவோரையும், அவற்றை நடத்துவோரையும் கண்டித்து வழிவகை ஏற்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இது தடையை மீறி ரம்மி போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவோருக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆன்லைன் ரம்மி போன்ற இணையவழி சூதாட்டங்களை நடத்துவோருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon