மகாத்மா காந்திக்கு ஏன் நோபல் பரிசு வழங்கப்படவில்லை..?
மிகுந்த தேசியவாத தன்மை கொண்டு இருந்ததால் தான் மகாத்மா காந்திக்கு நோபல் பரிசு வழங்கப்படவில்லை என நோபல் அறக்கட்டளையின் கட்டுரை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆங்கிலேயருக்கு எதிராக அகிம்சை முறையில் போராடிய மகாத்மா காந்தி ஐந்து முறை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டும் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் நோபல் அறக்கட்டளையின் கட்டுரை ஒன்றில் காந்தி தேச நலனுக்காக அதிகம் செயல்பட்டதாகவும், உலக அமைதிக்கு கலங்கரை விளக்கமாக செயல்படுபவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.






