முன்களப் பணியாளர்களாக ஈடுபட்டு உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு மருத்துவக் கல்வியில் உள்ஒதுக்கீடு..!
கொரொனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உயிர் தியாகம் செய்த முன் களப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு மருத்துவ கல்லூரிகளில் புதிய உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரொனா தடுப்பில் முன் களப்பணியின்போது உயிரிழந்தவர்களை கவுரவிக்கும் விதமாக இந்த உள் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
மருத்துவ கல்வியின் மத்தியில் இந்த உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மருத்துவ கவுன்சில் கமிட்டியைச் சேர்ந்தவர்கள் தகுதியுடைய நபர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறினார்.
கொரொனா வார்டுகளில் பணிபுரிந்தபோது உயிரிழந்தவர்களின் வாரிசுகள் இந்த உள் இடஒதுக்கீட்டை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.






