--- --:--:-- --

எனக்கு அப்பா, அம்மா இல்லை..! வேலை கொடுங்கள் என கெஞ்சிய சிறுவன்..!

9

காஞ்சிபுரத்தில் வேலை கேட்டு சுற்றித்திரிந்த 11 வயது சிறுவனை போலீசார் மீட்டு சைல்டு லைன் அமைப்பிடம் ஒப்படைத்துள்ளனர். காஞ்சிபுரம் குளக்கரை அருகே 11 வயது சிறுவன் அந்த பகுதி வழியாக சென்றவர்களிடம் தனக்கு தாய் தந்தை இல்லை என்றும் தனக்கு வேலை கொடுங்கள் என்று கேட்டு கெஞ்சியுள்ளார்.

 

இதை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் காஞ்சிபுரம் டி‌எஸ்‌பி மணிமேகலைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த மணிமேகலை சிறுவனை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் சைல்டு லைன் அமைப்பின் தலைவர் பிரபாகரனை அழைத்து சிறுவனை காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

 

Leave a Reply

Right Menu Icon