ஆலங்குளம் எம்எல்ஏ தூக்கமாத்திரை உட்கொண்டதால் பரபரப்பு..!
ஆலங்குளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதிகளவு தூக்க மாத்திரை உட்கொண்டதால் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதி எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
உட்கட்சி பூசல் காரணமாக மன உளைச்சலில் இருந்த பூங்கோதை தூக்க மாத்திரையை அதிக எண்ணிக்கையில் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.






