--- --:--:-- --

பஞ்சாப் மாநில அடையாளச் சின்னமாக நடிகர் சோனுசூட் நியமனம்..!

3

ஞ்சாப் மாநில அடையாளச் சின்னமாக நடிகர் சோனுசூட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பிரபல வில்லன் நடிகர் சோனு சூட் பெருந்தொற்று காலத்தில் தொடர்ந்து மக்களுக்கு உதவிகள் செய்து தற்போது ரியல் ஹீரோவாக மாறியுள்ளார்.

 

ஊரடங்கு காலத்தில் சிக்கியவர்களுக்கு தங்களது சொந்த ஊருக்கு அனுப்பிய அவர் புலம் பெயர்ந்தவர்களுக்கும் பல்வேறு உதவிகளை செய்தார். அவரது மனித நேயம் அனைத்து தரப்பு மக்களால் பாராட்டப்பட்டது.

 

இந்நிலையில் பஞ்சாப் தலைமை தேர்தல் அதிகாரி சோனு சூட்டை பஞ்சாப் மாநில அடையாளச் சின்னமாக நியமிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைத்தார். இதனை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டு சூட்டை பஞ்சாப் மாநில அடையாளச் சின்னமாக அறிவித்துள்ளது.

 

Leave a Reply

Right Menu Icon