--- --:--:-- --

மலேசியாவில் உயிரிழந்தவரின் உடலை தாயகம் மீட்டு வர கோரிக்கை..!

7

லேசியாவில் வேலைக்குச் சென்ற இடத்தில் மரணமடைந்த ராமநாதபுரம் இளைஞரின் உடலை தாயகம் கொண்டுவரக் கோரி உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

 

குயவன் குடியைச் சேர்ந்த வெங்கடேசன் மலேசியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் அவர் இறந்து விட்டதாக அங்கிருந்து தொலைபேசி மூலம் தகவல் வந்துள்ளது.

 

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வெங்கடேசனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து முறையிட்டனர்.

Leave a Reply

Right Menu Icon