--- --:--:-- --

மழையில் இருந்து தன் குஞ்சுகளை காப்பாற்றும் தாய் எலி..!

2

வந்தவாசியில் மழையால் பாதிக்கப்பட்ட எலி ஒன்று தனது குஞ்சுகளை வாயில் கவ்வியபடியே பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்ற காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வந்தவாசியை சேர்ந்த ஒருவர் தனது வீட்டின் அருகே இருந்த இந்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்துள்ளார்.

 

அவரது வீட்டின் எதிரே வளை தோண்டி வசித்த ஒரு எலி குஞ்சுகளை ஈன்று உள்ளது. தற்போது பெய்த மழையால் அதன் வலைக்குள் தண்ணீர் புகுந்ததால் எலிக் குஞ்சுகள் தவித்தன. இதை காண பொறுக்காத தாய் எலி தன் பிள்ளைகளை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்ல முனைந்தது .

 

ஒவ்வொரு குஞ்சாக தனது வாயில் கவ்வியபடியே மழைநீரை கடந்து ஒரு வீட்டின் மாடிப் படிக்கு கீழே பாதுகாப்பான இடத்தில் சேர்த்தது. தாய் அன்பிற்கு இணையே இல்லை என்பதற்கு மேலும் ஒரு சாட்சியாக இந்த காட்சிகள் அமைந்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon