உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கமளிக்க வேண்டும் – மோடி
உள்ளூர் பொருட்களுக்கு ஊக்கமளிக்குமாறு ஆன்மீக தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். ஜெய்நாச்சாரியா ஸ்ரீ விஜயபள்ளப் சுரேஷ்வர் ஜி மகாராஜின் 151 வது பிறந்த நாளையொட்டி அமைதிக்கான சிலையை காணொளி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
சமண குருவை கௌரவிக்கும் விதமாக நிறுவப்பட்டுள்ள சிலைக்கு அமைதிக்கான சிலை என பெயரிடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கம் அளிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி ஆன்மிக தலைவர்கள் பொது மக்களுக்கு விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.






