தமிழகத்தில் இன்று 1725 பேருக்கு கொரோனா பாதிப்பு..!2384 பேர் டிஸ்சார்ஜ்…! உயிரிழந்தோர் 17 பேர்!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1725 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 2384 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென கீழ்நோக்கி குறைந்து வருகிறது. இன்று 4 – வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழாக பாதிப்பு பதிவாகியுள்ளது. இன்றைய பாதிப்பு நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1725 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரையிலான மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7.60 லட்சமாக உயர்ந்துள்ளது. இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 2384 ஆகும் .
கொரோனா தொற்று பாதிப்பால் தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் இன்னும் 15765 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் தினசரி நிகழும் உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 17 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 11,495 ஆக உள்ளது. இதுவரை 1 .11 கோடி பேரிடம் கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் கொரோனா பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையும் 210 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 497 பேருக்கும், செங்கல்பட்டில் 118, கோவையில் 174 என இந்த 3 மாவட்டங்களில் மட்டுமே தினசரி பாதிப்பு நூறுக்கு மேலாக பதிவாசியுள்ளது. மற்ற 34 மாவட்டங்களிலும் நூறுக்கு கீழாகவே இன்றைய கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





