--- --:--:-- --

டிசம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கா? மத்திய அரசு கூறிய விளக்கம் என்ன?

4

டிசம்பர் 1 ம் தேதி முதல் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் கொரானா வைரஸ் இரண்டாவது அலை பரவி வருவதாகவும் இதனால் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியானது.

 

இந்நிலையில், மீண்டும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக வெளியான தகவல் வதந்தி எனவும் இது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon