விஜய் ஆண்டனி நடிக்கும் படத்திற்கு கோடியில் ஒருவன் என தலைப்பு..!
விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு கோடியில் ஒருவன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இசை அமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனி மெட்ரோ படத்தின் இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணா இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அந்த படத்திற்கு கோடியில் ஒருவன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. விஜய் ஆண்டனி நடிக்கும் இந்த படம் முற்றிலும் புதிய கதைக் களத்துடன் உருவாகிறது என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர். கோடியில் ஒருவன் படத்தின் முதல் கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.






