--- --:--:-- --

மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜகவே வெற்றி..!

1

த்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியே பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

 

மத்திய பிரதேசத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்புடன் இடைத் தேர்தலை எதிர்கொண்ட பாரதிய ஜனதா கட்சி தேர்தல் நடைபெற்ற 28 தொகுதிகளில் 19 தொகுதிகளில் வெற்றி பெற்று உள்ளது.

 

இதன் மூலம் மத்திய பிரதேச சட்டப் பேரவையில் அதன் பலம் ஆட்சியை தக்க வைக்க தேவையான 116 உறுப்பினர்களை தாண்டி 126 உறுப்பினர்களாக அதிகரித்துள்ளது. குஜராத்தில் 8 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் 8 இடங்களிலும் ஆளும் பாஜக வெற்றி பெற்றது.

 

உத்திரபிரதேசத்தில் 7 தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்று நிலையில் 6 இடங்களில் ஆளும் பாஜகவும், சமாஜவாதி ஓரிடத்திலும் வெற்றி பெற்றனர். கர்நாடகாவில் இடைத் தேர்தல் நடைபெற்று இரண்டு தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ளது.

 

ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. மணிப்பூரில் 5 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில் நான்கு இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்தில் வெற்றி பெற்றார்.

 

தெலுங்கானாவில் இடைத் தேர்தல் நடைபெற்ற ஒரு தொகுதியில் ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியை பின்னுக்கு தள்ளி பாஜக வெற்றி பெற்றுள்ளது.

 

சத்தீஸ்கர் மற்றும் ஹரியானாவில் தலா ஒரு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர் . ஜார்க்கண்டில் காங்கிரஸ் ஓரிடத்திலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

Leave a Reply

Right Menu Icon