--- --:--:-- --

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங்.!

8

லடாக் எல்லைப் பிரச்சினைக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ஒரே கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளனர். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்த முறை தலைவர்கள் அனைவரும் காணொளி மூலமாக பங்கேற்கின்றனர்.

 

பிரதமர் நரேந்திர மோடி சீன அதிபர் ஜீ ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆகியோர் இதில் பங்கேற்க உள்ளனர். பொதுவாக இதுபோன்ற மாநாடுகளில் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவர்.

 

ஆனால் காணொளி கூட்டம் என்பதால் மோடியும், ஜீ ஜின்பிங்கும் தனிப்பட்ட முறையில் பேச வாய்ப்பில்லை. இது தவிர வரும் 17ஆம் தேதி பிரிக்ஸ் மாநாடு மற்றும் 21 ஆம் தேதி நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டிலும் மோடி , ஜீ ஜின்பிங்க் ஆகியோர் காணொளியில் பங்கேற்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon