சிறையில் கைதி இறந்த வழக்கில் அரசு மருத்துமனை மருத்துவரிடம் விசாரணை..!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சிறையில் கைதி இறந்த வழக்கில் அரசு மருத்துமனை மருத்துவரிடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார்.
கடந்த 30 ஆம் தேதி திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு விருத்தாசலம் சிறையில் அடைக்கப்பட்ட காடாம்புலியூரை சேர்ந்த செல்வ முருகன் நான்காம் தேதி இறந்துள்ளார். போலீசார் சித்திரவதையில் தன் கணவர் செல்வமுருகன் இறந்ததாக மனைவி பிரேமா குற்றம்சாட்டிய நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இந்தநிலையில் கைதி உயிரிழப்பு தொடர்பாக விருத்தாச்சலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பிரேமாவிடம் விசாரணை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து செல்வ முருகனுக்கு விருதாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த மருத்துவர் கோவிந்தனிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். இதனிடையே ஐந்தாவது நாளாக சடலத்தை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.






