போலீஸ் சீருடை அணிந்து நடமாடிய இளைஞர்..!
அரியலூரில் போலீஸ் சீருடை அணிந்து நடமாடிய இளைஞரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள். வி கைகாட்டி பகுதியில் காக்கி சீருடையில் இருந்த இளைஞன் சரக்கு வாகனத்தை வாடகை பேசிக்கொண்டிருந்ததை போலீசார் கண்டனர்.
காக்கி சீருடையில் ஆந்திர போலீஸ் போல சிவப்பு கயிறு இருந்ததால் சந்தேகமடைந்து விசாரித்ததில் இளைஞரின் பெயர் பாலமுருகன் என்பதும் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவன் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தந்தை வைத்திருந்த பணத்தை எடுத்து வந்து புதிய மோட்டார்சைக்கிள், போலீஸ் சீருடை, ஊசி போடும் சிரஞ்ச் ஆகியவற்றை வாங்கியதை கண்டுபிடித்து போலீசார் பறிமுதல் செய்தனர்.






