--- --:--:-- --

பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது..!

1.1

பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறும் நிலையில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள 55 வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

ஆட்கள் கூடுவதை தடுப்பதற்காக ஓட்டு என்னும் மையங்களிலும் அவற்றைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரொனா காலமென்பதால் விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகின்றன.

 

முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கிருமிநாசினி திரவ பாட்டில்கள் போதிய அளவில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சுற்று முடிவுகளில் மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில் காண்பிக்கப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon