கமலா ஹாரிஸூக்கு மு.க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்..!
அமெரிக்க துணை அதிபராக தேர்வாகி இருக்கும் கமலா ஹாரிசுக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தமிழில் வாழ்த்து மடல் அனுப்பியுள்ளார்.
கமலா ஹாரிசின் தமிழக தொடர்பை நினைவூட்டும் வகையில் தமிழில் வாழ்த்து மடல் எழுதி இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ள ஸ்டாலின் அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டிருப்பது தமிழக மக்கள் அனைவரையும் பெருமிதம் அடைய வைக்கும் இனிய செய்தி என கூறுகிறார்.
தங்களின் ஆட்சிக்காலம் அமெரிக்காவிற்கு மேலும் புகழ் சேர்த்து தமிழர் தம் பாரம்பரிய பெருமையை உலகிற்கு பறை சாற்றுவதாக அமையட்டும் என கடிதத்தில் தெரிவித்துள்ள ஸ்டாலின் தங்களது வருகையை தமிழகம் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறது எனக் கூறியுள்ளார்.






