திருமணம் செய்த 15 நாட்களிலே காதல் மனைவியை விட்டு சென்றதால் மனைவி தற்கொலை..!
சென்னையில் காதல் திருமணம் செய்த எம்பிஏ பட்டதாரி இளம்பெண் கணவர் கைவிட்டதால் விரக்தியடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சூளைமேடு அண்ணாசாமி தெருவில் வசித்த காயத்ரி ஐடி நிறுவன ஊழியர் வினோத் என்பவரை மூன்று ஆண்டுகளாக காதலித்து கடந்த ஜனவரி மாதம் காரம் பிடித்திருந்தார்.
தனது பெற்றோருக்கு தெரியாமல் காயத்ரியுடன் மூன்று ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்த வினோத் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மனைவியை தவிக்க விட்டு விட்டு நண்பர்களுடன் புதுச்சேரிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
செல்போன் மூலம் கணவரை தொடர்பு கொள்ள முயற்சித்து தோல்வி அடைந்ததால் மனமுடைந்த காயத்ரி வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வினோத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி காயத்ரியின் தாயார் சூளைமேடு போலீசில் புகார் கொடுத்துள்ளார்.






