--- --:--:-- --

தூத்துக்குடியில் காவலனே கொள்ளையனாக இருந்த சம்பவம்..!

12

வேலியே பயிரை மேய்ந்த கதையாக நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் வீடுகளில் நடந்த  கொள்ளை சம்பவம் தொடர்பாக காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த கற்குவேல் 2017ஆம் ஆண்டு காவல் இளைஞர் படையில் இருந்து 400 பேரில் ஒருவராக தேர்வானார்.

 

பயிற்சி முடித்து தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் ஏட்டாக பணியில் சேர்ந்துள்ளார். கற்குவேல் தொடர்ந்து பல நாட்கள் இரவு பணியில் இருந்து வந்துள்ளார். விரைவில் பணக்காரராக வேண்டும் என்று ஆசைப்பட்ட கற்குவேல் பகலில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொள்ளைகளில் ஈடுபட்டு உள்ளார்.

 

இந்நிலையில் கடந்த மாதம் பத்தாம் தேதி தங்கதுரை என்பவரது வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பான விசாரணையில் கற்குவேல் கைரேகை கொள்ளை நடந்த இடத்தில் நடந்த கைரேகையுடன் ஒத்து போகிறது. இதையடுத்து ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு நடவடிக்கைகளை காவல்துறையினர் ரகசியமாக கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

 

அப்போது கற்குவேல் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டது உறுதியானது. எனவே கற்குவேல் கைது செய்யப்பட்டது விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon