--- --:--:-- --

சுவரொட்டி ஓட்டுபவர்களுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!

4

ஜனநாயகத்தில் விமர்சனம் ஆரோக்கியமானதாகவும் ஆக்கபூர்வமாகவும் இருக்க வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெயர், முகவரி இல்லாமல் சுவரொட்டிகள் ஓட்டுபவர்களுக்கு தமிழக மக்கள் தரும் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும் என்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

 

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை கருத்தில் கொண்டு போஸ்டர் ஓட்டுவதை தடுக்கும் கடமை மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் இருக்கிறது என்றும் ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததன் மூலம் இது ஆட்சியில் இருப்போர் ஏன் அனுசரணையோடும், ஆதரவோடு நடப்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

போஸ்டர்களை பார்த்து திமுகவினர் ஆத்திரம் அடைய வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள ஸ்டாலின் திமுக வெற்றி பெறுவது உறுதி என்று தெரிந்து கொண்டு நம்மை ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்றும், போஸ்டர் ஒட்டுபவர்களை மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

 

தமிழகத்தின் உரிமைகளை காக்க எள்ளளவும் முயற்சிக்காத பெயரோ, முகவரியோ வெளியிட திராணி இல்லாத தில்லுமுல்லு பேர்வழிகளுக்கு தமிழக மக்கள் தரும் தண்டனை வரலாற்றில் மறக்க முடியாததாக இருக்கும் என ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon