--- --:--:-- --

அதிபர் தேர்தல் தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட பதிவுகளுக்கு ட்விட்டர் கண்டனம்..!

3

Official portrait of President Donald J. Trump, Friday, October 6, 2017. (Official White House photo by Shealah Craighead)

அதிபர் தேர்தல் தொடர்பாக டிரம்ப் வெளியிட்ட பதிவுகளுக்கு ட்விட்டர் கண்டனம் தெரிவித்துள்ளது. தேர்தலில் தலையிடும் வகையிலான செயலுக்கோ, தேர்தலில் குளறுபடிகளை மேற்கொள்ளும் வகையிலான செயலுக்கோ தனது சேவைகளை பயன்படுத்த கூடாது என்ற கொள்கையை ட்விட்டர் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

 

அத்தகைய பதிவுகளை மறைப்பது போன்ற நடவடிக்கையையும் ட்விட்டர் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று வெளியிட்ட பதிவு ஜனநாயக கட்சியினர் சதி மூலம் வெற்றியை தட்டிப் பறிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டியிருந்தார்.

 

இது ட்விட்டர் கடைபிடிக்கும் கொள்கைக்கு முரணாக இருந்ததால் அதை அந்த நிறுவனம் மூடி மறைத்துள்ளது. மேலும் அந்த பதிவில் இருக்கும் கருத்துக்கள் சர்ச்சைக்குரியது எனவும் தேர்தல் அல்லது பிற செயல்களில் தவறாக வழிநடத்தும் வகையில் ஆனது எனவும் கூறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon