--- --:--:-- --

சிகரெட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் பாஜக பிரமுகர் மீது துப்பாக்கி சூடு..!

2

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே பாஜக பிரமுகரை முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருமாள் புரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெபமணி, பாஜக இளைஞரணி மாவட்ட பொது செயலாளர் பெரியதுரை ஆகிய இருவரும் எதிரெதிர் வீட்டில் வசித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் சிகரெட் பிடிப்பதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. அதில் ஆத்திரமடைந்து ஜெபமணி தனது தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

 

கையில் பலத்த காயம் அடைந்த பெரியதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon