சமையல் எரிவாயு முன்பதிவு செய்ய புதிய தொலைபேசி எண் அறிமுகம்..!
சமையல் எரிவாயு முன்பதிவு செய்ய நாடு முழுவதும் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் புதிதாக ஒரே எண் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 7 7 1 8 9 5 5 5 5 5 என்ற எண்ணிற்கு அழைப்பு மேற்கொண்டும் குறுந்தகவல் அனுப்பியும் 24 மணி நேரமும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தாலும் சிலிண்டர் முன்பதிவை எவ்வித சிரமும் இன்றி செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






