எதிரிநாட்டு கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணை சோதனை வெற்றி..!
எதிரிநாட்டு கப்பல்களை தாக்கி அழிக்கக்கூடிய ஏவுகணையை இந்திய கடற்படை வெற்றிகரமாக பரிசோதித்து உள்ளது. வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஐஎன்எஸ் கோரா கடற்கரை கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இலக்கை தாக்கி அழித்தது.
அதிகபட்ச தொலைவுக்கு பாயக்கூடிய ஏவுகணை சோதனை துள்ளியமாக அமைந்ததாகவும், இலக்கு பற்றி எரிந்ததாகவும் தெரிவித்துள்ள கடல் படை அதன் காட்சிகளை வெளியிட்டுள்ளது. இதேபோன்று கடந்த வாரம் அரபிக்கடலில் கப்பல் அழிப்பு ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக சோதித்துள்ளது.
இந்தியா தனது ஏவுகணைகளை அண்மைக் காலமாக தொடர்ந்து சோதித்து அவரின் தயார் நிலையை உறுதிப்படுத்து வருவது குறிப்பிடத்தக்கது. சீனாவில் சோதனைகள் முன்புறமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.






