--- --:--:-- --

பசும்பொன் தேவர் குருபூஜைக்கு 300க்கும் மேற்பட்ட பைக்கில் சென்றவர்கள் தடுத்து நிறுத்தம்..!

11.2

பசும்பொன் தேவர் குருபூஜைக்கு 300க்கும் மேற்பட்ட பைக்கில் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மானாமதுரையில் மறியல் 3கிலோ மீட்டர் தூரத்திற்கு   வாகனங்கள் நின்றது.

 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சங்கமங்களம் என்ற இடத்தில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜைக்கு பைக்கில் வந்த் சுமார் 2000 நபர்களை தடுத்து நிறுத்தியதால் வாகனங்களை நிறுத்தி மதுரை இராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் போரட்டம் செய்தனர்.

 

இதனால் மதுரையில் இருந்து குருபூஜைக்கு சென்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்வர்கள் வெகு நேர்மாக காத்திருந்தனர்.மானாமதுரையில் இருந்து டூவிலரில் செல்ல கூடாது என்று பல வித கட்டுபாடுகள் இருந்தாலும் விதிமுறைகள் மீற கூடாது என ஏற்கனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறையினர் கட்டுபாடுகளை விதித்து இருந்தனர்.

ஆனால் விதிமுறைகளையும் மீறி இன்று காலை 300க்கும் மேற்பட்டவர்கள் பசும்பொன் தேவர் குருபூஜைக்கு பைக்கில் செல்ல முற்பட்டனர்.அவர்களை தடுத்த போலிசாருக்கும் பைக்கில் வந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மதுரை இராமேஸ்வரம் செல்லும் ரோட்டில் 300 க்கும் மேற்பட்ட பைக்குகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட கார்கள் 3 கிமீ தூரத்த்திற்கு நின்றன.

 

மாவட்ட எஸ்.பி ரோகித் நாதன் ராஜகோபல் பேச்சுவார்த்தை நடத்தினர். பல மணி நேர பேச்சு வார்த்தைக்கு பிறகு பைக்கில் வந்தவர்கள், அந்த இடத்திலேயே பைக்கு நிறுத்தி விட்டு செல்லுமாறு கூறியதை அடுத்து போராட்டக்காரர்கள் களைந்து சென்றனர்.

பசும்பொன் தேவர் குருபூஜை செல்பவர்களுக்கு காவல்துறையினர் பயன்படுத்தும் பேருந்துகள் ஏற்பாடு செய்து தருவதாக போலிசார் உறுதி அளித்தால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் களைந்து சென்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon