மிசோரம் மாநிலத்தில் முதன்முறையாக ஏற்பட்டுள்ள கொரொனா உயிரிழப்பு..!
கொரோனா உயிர் பலி ஏற்படாத ஒரே மாநிலமாக இருந்த மிசோரமில் முதன்முறையாக கொரொனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
இதுவரை 2607 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டது. நல்லவேளையாக அங்கு யாரும் கொரோனாவால் உயிரிழந்ததில்லை. இந்தியாவில் கொரொனா உயிர் பலி ஏற்படாத ஒரே மாநிலமாக மிசோரம் இருந்து வந்தது. இந்த நிலையில் அங்கு முதல் முறையாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் ஐஸ்வால் அருகே அரசுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த 62 வயதான ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.






