தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது காற்றின் தரத்தை மோசமடையச் செய்யும்..!
தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது காற்றின் தரத்தை மோசமடையச் செய்து கொரொனாவின் தீவிரத்தை அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதிகளவில் பட்டாசு வெடிக்கப்படும் போது காற்றின் தரம் மிக மோசமாகும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் நுரையீரல் தொற்று நோய்கள் ஏற்படும் என்றும் கொரொனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு அதன் தீவிரம் மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பட்டாசு வெடிக்கும்போது மெட்டல் ஆக்சைடு போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறுவதே இதற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜூலை மாதத்திலிருந்து 50க்கும் குறைவாக இருந்த காற்றின் தரக்குறியீடு அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து நூற்றுக்கும் மேல் உயர தொடங்கியது. நவம்பர் மாதத்தில் இந்த அளவு 150 க்கு மேல் உயரக்கூடும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.






