--- --:--:-- --

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியது சந்தோஷமாக உள்ளது எனக்கூறிய இலங்கை அமைச்சர்..!

2

னுஷ்கோடி அருகே மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் இலங்கை கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்களை நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் கற்கள் மற்றும் பாட்டில்களை கொண்டு தாக்குதல் நடத்திய வீடியோ வெளியானது.

 

இது தொடர்பாக நேற்று இலங்கையில் பேசிய அந்நாட்டு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்திருந்தார்.

 

இலங்கை அமைச்சரின் கருத்திற்கு தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் நேற்று மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon