பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி கோவை இருகூரில் தேவரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை !!!
கோவை விமான நிலையத்தில் டாக்டர்.ஆர்எம்ஆர் பாசறையைச்சேர்ந்த நிர்வாகிகள் ராம் மோகன் ராவுக்கு உற்சாக வரவேற்பளித்தனர். நாட்டுக்காகவும் சமுதாயத்திற்காகவும் பாடுபட்ட தலைவர்களை டாக்டர் ஆர்.எம்.ஆர் பாசறை சார்பில் தமிழகம் முழுவதும் கௌரவிக்கப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு மதுரையில் பிரம்மாண்டமான பேரணி நடத்தி முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
தொடர்ந்து மாவீரன் கட்டபொம்மன் நினைவிடமான கயத்தாறில் மாலை அணிவித்து கெளரவிக்கப்பட்டது. தற்போது முத்துராமலிங்க தேவர் 113 ஆவது ஜெயந்தியையொட்டி கோவை இருகூரில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு ஆர்.எம்.ஆர் பாசறை நிர்வாகி தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் டாக்டர்.ராம் மோகன் ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதற்காக சென்னையில் இருந்து கோவை விமான நிலையம் வந்த அவருக்கு விமான நிலையத்தில் பாசறை நிர்வாகிகள் கோவை கிருஷ்ணராஜ், கௌதம்,ஆனந்த பத்மநாபன்,திண்டுக்கல் கிருஷ்ணமூர்த்தி, விடுதலை களம் நாகராஜ்,தேக்கமலை பூபதி,சேலம் ஜெயக்குமார், பிரேம்குமார் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொண்டர்களின் வரவேற்பினை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் ராம் மோகன் ராவ்.பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தின் மிகப்பெரிய தலைவருக்கு மரியாதை செலுத்துவதில் தனக்கு பெருமையாக இருப்பதாக தெரிவித்தார்.







