--- --:--:-- --

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது..!

5

காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் காணொளி மூலம் இந்த கூட்டம் நடைபெறுகிறது.

 

தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் மணி வாசன், காவிரி தொழில்நுட்ப பிரிவின் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் சென்னையில் இருந்தபடியே காணொலி முறையில் கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.

 

கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்கின்றனர். கூட்டத்தில் கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் விவகாரத்தை எழுப்பவும், கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

 

காவிரியில் தமிழகத்திற்கான பங்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யும் விதமாகவும் கருத்துக்களை முன் வைக்கவும் தமிழக அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon