--- --:--:-- --

திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர்.” காண்டான ” திமுக !!!

6.1

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையில் குனியமுத்தூர்,காந்திபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த ” வால் போஸ்டரால் ” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதற்கொண்டு ஒட்டுமொத்த திமுகவினரையும் கதிகலங்க வைத்துள்ளது என்றே சொல்லலாம்.

 

அந்த வால் போஸ்டரில் ” தன்னம்பிக்கை மிக்க தலைமையா ? துண்டுச்சீட்டுத்தலைமையா ? ” எனவும், ” உழைப்பை நம்பலாமா ? பிறப்பை நம்பலாமா ? ” எனவும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை உயர்த்தியும்,திமுக தலைவர் ஸ்டாலினை தாழ்த்தியும் விமர்சனம் செய்து அச்சிடப்பட்டிருந்தது.அந்த போஸ்டரில் அச்சிட்ட பிரிண்டர் பெயர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்த போஸ்டர் விவகாரம் திமுகவினர் மத்தியில் கடும் கோபத்தை உண்டாக்கிய நிலையில் கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் திமுகவினரால் கிழித்தெறியப்பட்டன.மேலும்,இதுகுறித்து திமுக தலைவர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் போஸ்டர்கள் ஒட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திமுகவினரால் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது.

இந்த நிலையில் போஸ்டர்களை கிழித்ததாகவும்,அதிமுக பொறுப்பாளர்கள் மீது அவதூறு பரப்புவதாகவும் கூறி கோவையில் போஸ்டர்களை கிழித்த திமுகவினர் பலர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டர் விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிச்சாமியை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் போஸ்டர்பழனிச்சாமி என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங்கும் ஆனது.

 

இந்த நிலையில் இந்த போஸ்டர் விவகாரம் தொடர்பாகவும்,அதிமுக அரசின் அராஜக ஆட்சியை கண்டித்தும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் அதிமுக அரசை கண்டித்து முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

 

அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின் ” அமைச்சர் வேலுமணி பிளீச்சிங் பவுடர் முதல் மாஸ்க் வரை அனைத்திலும் ஊழல் எனவும்,யார் முதல்வர்? என கேள்வியெழுப்பிய அவர் நிழல் முதல்வராக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இருக்கிறார் என குற்றஞ்சாட்டினார்.

மேலும்,வரும் தேர்தலில் மக்கள் சாவு மணி அடிக்க போகின்றனர், துரத்தி துரத்தி அடிக்க போகின்றனர் எனவும்,பெயரை போட்டு போஸ்டர் அடிக்க கூட தைரியமில்லாதவர் வேலுமணி என கூறிய அவர் இதை விட அசிங்கமாக,சிறப்பாக போஸ்டர் அடிக்க தங களுக்கும் தெரியும் எனவும் பேசினார்.அடுத்த முறை போஸ்டர் ஒட்டினால் கிழிக்க மாட்டோம்.அதன் மீதே வேறு போஸ்டர் ஒட்டுவோம் எனவும்,மேஜைகளுக்கு அடியில் ஊர்ந்து சென்று முதல்வர் பதவியை பிடித்தவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் கடுமையாக விமர்சித்தார்.

 

மேலும்,போஸ்டர் ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை இல்லை எனில் அடுத்த முறை குனியமுத்தூர் காவல் நிலையம் முன்பாக போராட்டம் நடைபெறும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

 

மேலும்,போராட்டம் நடைபெறுவதற்கு முன்பு காவல் துறையினர் போராட்டத்திற்கு அனுமதி மறுத்து பேனரை அகற்றியதால் காவல் துறையினருக்கும்,திமுகவினருக்கும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

இந்த நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 9 பேர் மீது 144 தடை உத்தரவை மீறுதல், பொதுமக்கள் இடையூறு விளைவித்தல், சமூக இடைவெளி முககவசம் அணியாமல் கூட்டம் கூடியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

மொத்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சித்து கோவையில் ஒட்டப்பட்ட போஸ்டரால் ஒட்டுமொத்த திமுகவினரும் காண்டாகி இருப்பதே உண்மை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon