சேலத்தை சேர்ந்த கல்லூரி மாணவி நந்திதா ஆசிய செஸ் தொடரில் தங்கப்பதக்கம் வென்று சாதனை..!
சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த கல்லூரி மாணவி நந்திதா ஆசிய செஸ் தொடரில் இந்திய அணி சார்பில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆன்லைனில் கடந்த 10 முதல் 25-ம் தேதி வரை நடைபெற்ற போட்டியில் 31 நாடுகளை சேர்ந்த பெண்கள் அணி விளையாடியது.
இந்திய அணியில் பங்கேற்ற சங்ககிரியை சேர்ந்த நந்திதா சிறப்பாக விளையாடிய தங்கப் பதக்கம் வெல்ல உதவியுள்ளார். இறுதிப் போட்டியில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இந்தோனேசியாவை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்று சாம்பியன் பட்டம் வென்றது.
இதில் நந்திதா காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி அனைத்திலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்ற இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற உதவியாக இருந்தார்.
ஏற்கனவே உலக அளவில் நடைபெற்ற ஜூனியர் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்று வுமன் கிரெண்ட் மாஸ்டராக தேர்வானதாக நந்திதா பெருமிதம் தெரிவித்தார்.






