கரூரில் சுவர் விளம்பரம் செய்வதில் திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம்..!
கரூரில் சுவர் விளம்பரம் செய்வதில் திமுக, அதிமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. அடுத்த மாதம் 27ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாட உள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை திமுகவினர் சேலம் புறவழிச்சாலையில் பாலத்தின் சுவரில் விளம்பரம் செய்ய முற்பட்டனர்.
இதை தடுத்த அதிமுகவினர் அடுத்த மாதம் 30ஆம் தேதி முதலமைச்சர் கரூர் வர இருப்பதாகவும் அவரை வரவேற்று சுவர் விளம்பரம் செய்யவிருப்பதாகவும் கூறி வாக்குவாதம் செய்தனர். பிரச்சினையை சமாளிக்க கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால் அதிமுகவிற்கு ஆதரவாக கோட்டாட்சியர் பேசியதாக திமுகவினர் குற்றம்சாட்டினார். முதல்வரின் வருகை உறுதி செய்யப்படாத நிலையில் தாங்கள் விளம்பரம் செய்வது தடுக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.






