ஊரணிக்கோட்டையில் தேன் எடுக்க சாலை ஓர புளிய மரத்திற்கு தீ வைத்ததில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு..!
திருவாடானை தாலுகா ஊரணி கோட்டைகிராமத்தில் சாலையோரத்தில் 50 வருட பழமை வாய்ந்த புளிய மரத்தில் சிறுவர்கள் தேன் எடுப்பதற்காக தீ வைத்துள்ளனர்.
இந்நிலையில் மரம் முழுவதும் தீப்பற்றி கிளைகள் முறிந்து வட்டாணம் – தேவகோட்டை சாலையின் குறுக்கே விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடன் திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் செங்கோல்ராஜ் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீயை அணைத்து சாலையில் கிடந்த கிளைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் 2 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






