சின்னகீரமங்கலத்தில் கொரொனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்..!
திருவாடானையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் திருவாடானை தீயணைப்பு மற்றும் மீட்பு பணி அதன் நிலைய அலுவலர் செங்கோல்ராஜ் தலைமையில் வீரர்கள் கரோனோ வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார துண்டுப் பிரசுரங்களை வழங்கினார்.

அந்த துண்டுப் பிரசுரத்தில் கட்டாயம் முககவசம் அணியுங்கள், உங்களின் செல்போனை பிறரிடம் கொடுக்காதீர்கள், பொருளை தொடும் போது கையுறை அணியுங்கள், அவசியம் பயணத்தின் போது இடைவெளியை கடைபிடிக்கவும், 2 மீட்டர் இடைவெளியில் உறவாடுங்கள், மக்கள் கூடும் இடத்தில் செல்வதை தவிருங்கள், இருமல், தும்மல், சமயத்தில் இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள், வாசம், சுவை அறியாத போது மருத்துவரை அழையுங்கள் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தீ அணைப்பு மற்றும் மீட்பு படையினர் கலந்து கொண்டார்கள்.






