--- --:--:-- --

சூரியனில் பூமியைவிட பெரியதான கருப்பு புள்ளி ஒன்று உருவாகியுள்ளது..!

8

சூரியனில் பூமியைவிட பெரியதான கருப்பு புள்ளி ஒன்று உருவாகி உள்ளதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

 

இதுகுறித்து ஷார்ஜா விண்வெளி ஆராய்ச்சி கண்காணிப்பு மையத்தின் உதவி ஆராய்ச்சியாளர் முகமது தளபா சூரியனின் மேற்பரப்பில் மற்ற இடங்களைக் காட்டிலும் ஓரிடத்தில் வெப்பம் குறைவாக இருந்தால் அந்த இடம் கரும்புள்ளியாக தெரிகிறது என்றார்.

 

தற்போது பூமியை விட பெரிய அளவிலான கருப்பு புள்ளியை விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 

சைக்கிள் 25 என்று பெயரிட்டுள்ள இந்த சூரிய புள்ளிகளால் வருகிற 2022 ஆம் ஆண்டில் பூமியில் சில விளைவுகள் ஏற்படும் என்றும் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள், கருப்பு புள்ளியால் ஏற்படும் சூரிய புயலால் சேதம் அடையக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Right Menu Icon