செல்பி மோகத்தில் மகனுடன் தண்ணீருக்குள் விழுந்து தாய் பலி..!
ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே செல்பி மோகத்தில் மகனுடன் தண்ணீருக்குள் விழுந்து தாய் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் பழமநேரி என்ற இடத்தில் நிகழ்ந்தது. தடுப்பணையில் அதிக அளவில் தண்ணீர் செல்வதை வேடிக்கை பார்க்க குடும்பத்துடன் சென்ற மூலா என்பவரின் மனைவி பர்வீனாவும், 8 வயது மகன் ஹமீதும் அங்கு செல்பி எடுத்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்த மகனை காப்பாற்ற முயன்றதால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தாயின் உடலை மீட்டனர். ஆனால் சிறுவனை தேடும் பணி தொடர்கிறது.







