--- --:--:-- --

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவு 19 நாட்களிலே வெளியிடப்படும்..!

3

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு முடிவில் 19 நாட்களிலேயே வெளியிடப்பட்டுள்ளது. மே மாதத்தில் நடத்தப்பட இருந்த சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு கொரொனா காரணமாக ஐந்து முறை ஒத்தி வைக்கப்பட்டு கடந்த நான்காம் தேதி நடத்தப்பட்டது.

 

6 லட்சத்துக்கும் அதிகமான பேர் பங்கேற்ற இந்த தேர்வு முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடந்து ஒரு மாதத்திற்கு பிறகு தான் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். முதல் முறையாக 20 நாட்களுக்கு உள்ளாகவே முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

 

முதல்நிலைத் தேர்விலிருந்து 10 ஆயிரத்து 556 பேர் பிரதான தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர். ஜனவரி 8 ஆம் தேதி முதல் தொடங்கும் என மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு‌பி‌எஸ்‌சி அறிவித்துள்ளது. ஐ‌ஏ‌எஸ், ஐ‌பி‌எஸ் உள்ளிட்ட பணியிடங்களுக்கு இந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon