--- --:--:-- --

மன்னார் வளைகுடா கடல் பாதுகாப்புக்காக அதிநவீன ரோந்து கப்பல்..!

10

ன்னார் வளைகுடா கடல் பாதுகாப்புக்காக அதிநவீன ரோந்து கப்பலை நிறுத்துவதற்கான இடத்தை கடலோர காவல் படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இருந்து அண்மைக்காலங்களாக சட்டவிரோதமான முறையில் இலங்கையில் மஞ்சள் கடத்தப்பட்டு வருகிறது.

 

கடலோர காவல் படையில் பெரிய கப்பல்கள் வரமுடியாத ஆழம் குறைந்த மன்னார் வளைகுடா கடல் பகுதி வழியாக போதைப்பொருளும், மஞ்சளும் கடத்தப்படுகின்றன. இதனால் கடத்தலை தடுக்க முடியாமல் கடலோர காவல் படையினர் திண்டாடி வருகின்றனர்.

 

இந்த நிலையில் கடத்தலை தடுக்கவும் மன்னார் வளைகுடா பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தவும் அங்கு அதிநவீன ரோந்து கப்பலை நிறுத்த கடலோர காவல் படையினர் முடிவு செய்துள்ளனர். இதனையொட்டி நவீன ரோந்து கப்பலை நிறுத்துவதற்கான இடத்தை கடலோர காவல் படையினர் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 

சென்னையிலிருந்து வரவிருக்கும் அதிநவீன ரோந்து கப்பலை பாம்பன் குந்துகால் பகுதியில் நிறுத்தி வைப்பது தொடர்பாகவும் ராமேஸ்வரம் கடற்படை கமாண்டர் இயக்கிய தாமஸ் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

 

மேலும் கப்பல் பிரச்சினையின்றி அந்த பகுதியை கடக்குமா என்பதை உறுதி செய்வதற்காக பாம்பன் துறைமுக பகுதியில் இருந்து குருசடை தீவு வரையிலான பகுதியில் கடலின் ஆழம், நீரோட்டம், அலைகளின் வேகம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனர்.

Leave a Reply

Right Menu Icon