--- --:--:-- --

ஆடுகளை திருடி விற்று மது அருந்திய இன்ஜினியரிங்க் மாணவர்கள்..!

9

துரையில் வாடகை டாக்ஸியில் ஆடுகளை திருடி சென்ற பொறியியல் பட்டதாரிகளை போலீசார் கைது செய்தனர். கரும்பாலை பகுதியில் ஆடுகளை மேய்த்து வந்த முத்து பாண்டி என்பவர் ஆடு காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆராய்ந்த போது இளைஞர் ஒருவர் ஆட்டை லாவகமாக தூக்கி டாக்ஸியில் திருடிச் சென்றது தெரியவந்தது.

 

சம்பந்தப்பட்ட மூன்று பேரை உசிலம்பட்டியில் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது ஆடுகளை திருடி உசிலம்பட்டி சந்தையில் விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் மது அருந்தி வந்ததாக தெரிவித்தனர்.

 

திருட்டு போன ஆட்டை மீட்ட போலீசார் கைது செய்யப்பட்ட மூவரில் இரண்டு பேர் பொறியியல் பட்டதாரிகள் என தெரிவித்தனர்.

Leave a Reply

Right Menu Icon