--- --:--:-- --

இரண்டு வயது குழந்தைக்கு மூச்சுக் குழாயில் சிக்கிய கல்..!

11

ரண்டு வயது குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கிய கல் ஒன்றை கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின்றி அகற்றியுள்ளனர். திருப்பூர் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த முனியாண்டி என்பவரின் 2 வயது ஆண் குழந்தை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது சிறிய கல்லொன்று மூக்கு வழியாக மூச்சு குழாயில் சிக்கியது.

 

இதனால் குழந்தைக்கு மூச்சு விடுதலில் சிரமம் ஏற்பட்டதையடுத்து அந்த குழந்தை கோவை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சுவாச குழாய் மூலம் கல்லை வெளியே எடுத்தனர்.

Leave a Reply

Right Menu Icon