--- --:--:-- --

கோவை மதுக்கரை தனியார் சிமெண்ட் ஆலையில் இருந்து கழிவுகள் வெளியேறுவதை தடுக்க கோரி அப்பகுதி மக்கள் ஆலையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் !!!

5

கோவை மதுக்கரை பகுதியில் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் சிமெண்ட் ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும் சிமெண்ட் கழிவுகளால் மதுக்கரை குரும்பபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாகவும்,உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குரும்பபாளையம் பகுதி மக்கள் ஆலையை மூடக் கோரியும் அல்லது கழிவுகள் வெளியேறாமல் தடுக்கக் கோரியும் வலியுறுத்தி சிமெண்ட் ஆலை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஆலை நிர்வாகம் தெரிவித்த நிலையில் தொடர்ந்து கழிவுகள் வெளியேறுவதை தடுத்ததால் மீண்டும் இன்று சிமெண்ட் ஆலை அலுவலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பொதுமக்கள் போராட்டத்தால் உடனடியாக கழிவுகளை வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,அதுவரை ஆலையில் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் எழுத்துப்பூர்வமாக வழங்கக்கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon