--- --:--:-- --

பிரபல ரவுடி ஆயுள் தண்டனைக்கு பிறகு மனம் திருந்தி தேநீர் விற்று வருகிறார்..!

8

மும்பையில் பிரபல ரவுடியாக வலம் வந்த தமிழகத்தை சேர்ந்த நபர் ஆயுள் தண்டனைக்கு பிறகு மனம் திருந்தி அரசு அலுவலகங்களில் தேனீர் விற்று வருகிறார். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கண்ணதாசன் என்று அந்த நபர் சிறுவயதிலேயே பிழைப்புக்காக மும்பை சென்று ரவுடி ஒருவனுடன் தொடர்பு ஏற்பட்டு கொலை, கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து என வலம் வந்துள்ளார்.

 

30க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கிய கண்ணதாசனுக்கு மும்பை உயர்நீதிமன்றம் 1988 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது. மும்பை சிறையில் கடலூர் மத்திய சிறையிலும் 21 ஆண்டுகள் கழித்து கண்ணதாசன் சிறையில் கற்பிக்கப்பட்ட தியானம், யோகா உள்ளிட்டவற்றால் மனம் திறந்து சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

 

வெளியில் வந்து கணவரை இழந்த பெண் ஒருவரை திருமணம் செய்து விருத்தாசலத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் தேனீர் வியாபாரம் செய்து வருகிறார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon