“கொரோனாவை வேரோடு அழிக்கும் வரை போராட்டம் ஓயாது; மக்களும் அலட்சியம் காட்ட வேண்டாம்!!” பிரதமர் மோடி உரை
கொரோனாவை அடி வேரோடு இந்தியாவில் ஒழிக்கும் வரை போராட்டம் ஓயாது;மக்களும் அலட்சியம் காட்ட வேண்டாம் என பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் ஆற்றிய உரையில் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் கொரோனா பரவத் தொடங்கியது முதல் பிரதமர் மோடி அடிக்கடி நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தி வருகிறது. ஏழாவது முறையாக இன்று உரை நிகழ்த்தினார். இந்த உரை தொடர்பாக இன்று பிற்பகல் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்த பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் முக்கிய செய்தி ஒன்றை பகிர்ந்து கொள்ள விரும்புவதாக தெரிவித்திருந்தார். இதனால் தமது உரையில் என்ன செய்தி கூறப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றியதில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு: இந்தியாவில் விழாக்காலம் நெருங்குவதால், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை விடக்கூடாது. இந்திய பொருளாதாரம் படிப்படியாக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது .
கொரோனா சிகிச்சைக்காக 90 லட்சம் படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையங்கள் இந்தியாவில் செயல்பாட்டில் உள்ளது; மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.
ஊரடங்கு காலம் முடிந்து பொருளாதாரம் பழைய நிலைமைக்கு திரும்புகிறது மோடி . ஆபத்தான காரியங்களில் ஈடுபட இது சரியான காலகட்டம் கிடையாது.
மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் நமக்காக பாடுபட்டு வருகின்றனர். கொரோனா பரவல் குறைவதை கண்டு நாட்டு மக்கள் பலர் முககவசம் இல்லாமலும், தனி மனித இடைவெளி கடைபிடிக்காமலும் அலட்சியம் காட்டுகின்றனர். இந்த அலட்சியம் கூடாது.
கொரோனா என்ற போரில், நம் சிறந்த ஆயுதமாக நாம் மேற்கொண்ட அதிக அளவிலான பரிசோதனைகள் போரில் இழப்பை கட்டுப்படுத்தியுள்ளது .
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை நாம் இதே நிலையை காட்டயம் கடைபிடிக்க வேண்டும்.
நோய் – நெருப்பு ; இரண்டின் மீதும் நாம் ஒருபோதும் அலட்சியம் காட்ட கூடாது. இரண்டுமே அதிக பாதிப்புகளை கொடுத்துவிடும் . கொரோனாவை அடி வேரோடு ஒழிக்கும் வரை நமது போராட்டம் தொடரும். மக்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தமது உரையில் தெரிவித்துள்ளார்.






