தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனை..!
தமிழகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத 12 லட்சத்து 34 ஆயிரத்து 26 ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது. ஊழல் தடுப்பு, கண்காணிப்புத் துறை அதிகாரிகள் மற்றும் ஆய்வுக் குழு அதிகாரிகள் இணைந்து தமிழகத்தில் உள்ள 11 அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் காட்டப்படாத 12 லட்சத்து 34 ஆயிரத்து 26 ரூபாய் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
நாமக்கல், சென்னை, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, திருவண்ணாமலை, கடலூர், மதுரை , திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதிகபட்சமாக நாமக்கல்லில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 740 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.






