கோவை உட்பட தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ” திடீர் ” ரெய்டு.கணக்கில் வராத ரூ.12.34 லட்சம் பறிமுதல் !!!
சென்னை,கோவை உட்பட தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் வராத ரூ.12,34,260 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் அதிகபட்சமாக நாமக்கல் டவுன் அண்ட் கண்ட்ரி பிளானிங் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ரூ.5,25,740 கணக்கில் காட்டப்படாத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதே போல் சென்னை, கிருஷ்ணகிரி, சேலம், கோவை, திருவண்ணாமலை, கடலூர், மதுரை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.12,34,260 பணம் கணக்கில் காட்டப்படாமல் சிக்கியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறையின் ஒரு நாள் சோதனையில் இவ்வளவு பணம் சிக்கியுள்ளது என்றால் மேலும் சோதனையிட்டால் அரசு அதிகாரிகள் எத்தனை பேர் சிக்குவார்கள் ? என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.2.50 லட்சம் பணம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.







