அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு..!
வெப்பச் சலனம் காரணமாக வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணத்தால் அடுத்த 24 மணி நேரத்தில் தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தின் வட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வடுவூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
19ஆம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாற கூடும் என்பதால் இப்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு மற்றும் அந்தமான் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







