--- --:--:-- --

சூரி தான் அளித்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரியுள்ளார்..!

3

நிலம் வாங்கி தருவதாக கூறி 2 கோடியே 70 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக தான் அளித்த புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி நடிகர் சூரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

 

நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், ஓய்வுபெற்ற டிஜிபியும் ஆன ரமேஷ் மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் இணைந்து நிலம் வாங்கி தருவதாக கூறி 2 கோடியே 70 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டதாகவும் ஆனால் நிலத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் தமது பணத்தை திரும்ப கேட்ட போது அவர்கள் தராமல் ஏமாற்றியதாகவும் நடிகர் சூரி புகார் தெரிவித்திருந்தார்.

 

இதனையடுத்து ரமேஷ் உள்ளிட்ட இருவர் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். தர வேண்டிய பணத்தை கேட்டபோது விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் மற்றும் அன்பு வேல்ராஜ் ஆகியோர் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் நடிகர் சூரி குற்றம் சாட்டியிருந்தார்.

Leave a Reply

Right Menu Icon